Sunday, October 14, 2007

மன்னித்து மறுபடியும் செயல் படுவோம்..................... நிருபம்

கர்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமதினால் எனது நல் வாழ்த்துகளை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
எனது சுவிசேசப்பயனங்களின் போது அனேக வேதனைப்பட்ட ஆத்துமாக்களை சந்திக்க நேரிட்டது எப்படியெனில் என் மகனுக்கு நான் செய்த நன்மைகளுக்கு அவன் என் மேல் அன்பு காட்ட்வில்லை. நான் செய்த ஜெபத்திற்கும் உதவிக்கும் விசுவாசிகள் நன்றி காட்டவில்லை. நாங்கள் ஊழியர்களுக்காக பட்ட பாடிற்க்கு ஊழிய்ர் எங்களை நேசிக்கவில்லை. உறவினர்களுக்கு செய்த உதவிகளுக்காக எஙகளிடம் பாச உணர்வுகளை வெளிகாட்டவில்லை. தோள்கொடுத்து தூக்கிவிட்டேன் என் நன்பன் என்னை திரும்பி பார்கவில்லை. உடன் பிறப்புகளுக்கு உதவி செய்தேன் அவர்கள் என்னை ஒதுக்கி விட்டார்கள். திருமணம் நடத்தி வைதேன் என்னை மறந்து விட்டார்கள். வேலை வாங்கி தந்தேன் என் மேல் பழி சும்த்தி விட்டார்கள். காணிக்கை அனுப்பி வைத்தேன் பெற்றுகொன்ட ஸ்தாபனம் ஒரு கடிதம் கூட போட வில்லை. என வேதனை பட்ட அனேக நெஞ்சங்களை சந்திக்க நெர்ந்தது

உதவும் நெஞ்சங்களுக்கு வேததிலுரிருந்து ஒரு சம்பவத்தை மட்டும் கூறி கொள்ள விரும்புகிறேன். நீங்கள் லூக்கா எழுதின சுவிசேசம் 17ம் அதிகாரம் 12 முதல் 19 வரை வாசித்து பாருஙகள் இஙகே நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பத்து குஷ்டரோகிகளை குணம் ஆக்குகிறார் அதில் ஒருவன் மட்டும் வந்து நன்றி சொல்கிறான் இதைப்பார்கும் போது 2000 ஆண்டுகளுக்கு முன்னாள் பத்து பேருக்கு ஒருவன் தான் நன்றியொடு இருந்திருகிறான் என்பது நன்றாக தெரிகிறது. இந்த 2007ம் ஆண்டிலே உதவி பெற்றவர்கள் நன்றியொடு இருப்பார்கள் என்று எதிர் பார்க்ககூடாது. நாம் மனிதர்களுக்கென்று செய்யாமல் எல்லாம் கர்த்த்ருக்காக செய்தோமென்றும், உதவுவது நமது கடமை என்றும் எண்ணி மன்னித்து மறுபடியும் செயல் படுவொம்

தேவனுடய பிள்ளைகளே, தொடர்ந்து தங்களால் இயன்ற உதவிகளைப்பிறருக்கு செய்து தேவனிடமிருந்து அசீர்வாதங்களை பெற்றுக்கொள்ளுங்கள்.சமாதானத்தின் தேவன் உஙகளோடு இருப்பாராக.